Propellerads
Navigation

'பைரவா' இசைவெளியீடு இப்போது இல்லையாம்..

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பைரவா' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இரவுபகலாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு கிறிஸ்துமஸ் தினத்தில் அல்லது அதற்கு முன்பாக வெளியாகும் என்று செய்திகள் வெளிவந்தன. தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளின்படி இந்த படத்தின் பாடல்கள் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் படக்குழுவினர்களின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை காத்திருப்போம்

மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து இந்த படத்தின் பாடல்கள் ஆடம்பரமான விழா ஏதுமின்றி நேரடியாக கடைகளில் வெளியாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. முதன்முதலாக விஜய் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளதால் இந்த படத்தின் பாடல்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: