Propellerads
Navigation

ப்ரணீத்தாவுக்கு இப்படி ஒரு ஆசையா?

உதயன், சகுனி, மாஸ் போன்ற படங்களில் நடித்தவர் கன்னட நடிகை பிரணிதா. தற்போது எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இதற்கு முன்பு தமிழில் நடித்த படங்கள் தன்னை ஏமாற்றியபோதும், இந்த புதிய படங்கள் வெற்றி பெற்று தமிழில் நிலையான இடத்தை பிடித்துக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கும் பிரணிதாவுக்கு ஒரு படத்திலேனும் டாக்டர் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது லட்சியமாக உள்ளதாம்.

காரணம், அவரது அப்பா-அம்மா இரண்டு பேருமே பெங்களூரில் டாக்டர்களாக உள்ளார்களாம். ஒரே மகளான பிரணிதாவையும் டாக்டராக்க வேண்டும் என்பதுதான் அவர்களது ஆசையாக இருந்ததாம்.

ஆனால், பிரணிதாவுக்கு சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் இருந்ததால் அவரது ஆசைக்கு தடை போடாமல் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டார்களாம். அதனால், நிஜத்தில் டாக்டராக முடியாதபோதிலும், டாக்டர் வேடத்தில் நடித்தாவது தனது பெற்றோரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று தன்னை சந்திக்கும் டைரக்டர்களிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்தி வருகிறார் பிரணிதா.


Share
Banner

Post A Comment: