Propellerads
Navigation

பஸ் உரிமையாளர்களுக்கு விஷால் வேண்டுகோள்


பஸ்சில், புதுப்படம் ஒளிபரப்ப வேண்டாம் என, பஸ் உரிமையாளர்களுக்கு, நடிகர் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்டோர் நடித்த, கத்திச் சண்டை படம், வரும், 23ல் வெளியாகிறது. இப்படத்தின் திருட்டு, விசிடி எந்த வகையிலும் வெளிவரக் கூடாது என்பதில், நடிகர் விஷால் அக்கறை காட்டி வருகிறார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருட்டு, விசிடிக்கு எதிராக, நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். இந்த முறை நான், பஸ் உரிமையாளர்களுடன் கைகோர்க்கிறேன்.

பஸ்சில் புதுப்பட, சிடிக்களை ஒளிபரப்பக் கூடாது என, ஊழியர்களுக்கு, பஸ் உரிமையாளர்கள் உத்தரவிட வேண்டும். இதன் மூலம், சினிமாவை நம்பியுள்ள, ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற முடியும்.

இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.
Share
Banner

Post A Comment: