கோலிவுட் திரையுலகில் நடிகர்கள் இயக்குனர்கள் ஆவது புதிதல்ல. உலக நாயகன் கமல்ஹாசன் முதல் தனுஷ் வரை பல முன்னணி ஹீரோக்கள் இயக்குனர்கள் ஆகியுள்ளனர். இந்த வரிசையில் விரைவில் இயக்குனர் ஆகவுள்ளார் நடிகர் அரவிந்தசாமி
கடந்த 90களில் அழகிய நாயகனாக வலம் வந்த அரவிந்தசாமி, கடந்த ஆண்டு ஜெயம் ராஜா இயக்கிய 'தனி ஒருவன்' படத்தின் மூலம் வில்லன் அவதாரம் எடுத்து ரீஎண்ட்ரி ஆனார். இந்த படம் அவருக்கு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தவே தற்போது அவர் 'போகன்', 'சதுரங்க வேட்டை 2' என கோலிவுட்டின் பிசியான நடிகர்களில் ஒருவராகிவிட்டார்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு இறுதியில் அவர் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். தன்னிடம் இரண்டு கதைகள் இருப்பதாகவும், அவற்றில் ஒன்றை 2017 இறுதியில் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அரவிந்தசாமியின் இயக்கும் படம் குறித்த தகவலை அறிய அனைவரும் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: