Propellerads
Navigation

சிம்புவின் ‛ஏஏஏ' படத்திற்கும் பஞ்சாயத்து ஆரம்பம்


சிம்பு படம் என்றாலே பிரச்னையில்லாமல் வெளிவராது என்ற நிலைமை உருவாகிவிட்டது. சில படங்களில் சிம்புவாலேயே பிரச்னை வரும், இல்லையென்றால் சிம்பு படத்தின் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து பிரச்னை வரும்.

ஆக மொத்தத்தில் பாதிக்கப்படுவது என்னமோ சிம்பு படம் தான். தற்போது சிம்பு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் சுருக்கமாக ‛ஏஏஏ' என்ற படத்தில் நடித்து வருகிறார். சிம்பு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார்.

மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது.

இந்நிலையில், சிம்பு படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ரூ.25 லட்சம் தரவில்லை என பைனான்சியர் ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், பணத்தை திரும்பித் தரும் வரை சிம்பு படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 இம்மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள், இந்த புகார் தொடர்பாக வருகிற டிச.23 ஆம் தேதிக்குள் மைக்கேல் ராயப்பன் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
Share
Banner

Post A Comment: