Propellerads
Navigation

நிர்வாண காட்சியில் நடித்த பாபி சிம்ஹா!


ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக நடித்து பேசப்பட்டவர் பாபி சிம்ஹா. அதோடு அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த வில்லன் நடிகருக்கான தேசிய விருதும் பெற்ற அவர், பின்னர் முழுநேர ஹீரோவாகி விட்டார். ஆனால் அப்படி அவர் நடித்த படங்கள் அவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் தற்போது நெகடீவ் கலந்த ஹீரோவாக திருட்டுப்பயலே-2 உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஆடம்தாசன் இயக்கத்தில் பாபி சிம்ஹா நாயகனாக நடித்துள்ள பாம்பு சட்டை படம் திரைக்கு வர தயாராகி விட்டது. டிசம்பர் 30ந்தேதி திரைக்கு வரயிருப்பதாக கூறினாலும், விளம்பரங்களில் தேதியை குறிப்பிடாமல் விரைவில் பாம்புசட்டை வெளியாகிறது என்று மட்டுமே குறிப்பிட்டு வருகின்றனர். காரணம், இந்த படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்து விட்டபோதும், சென்சார்போர்டு அதிகாரிகள் கத்தரிக்க சொன்ன சில காட்சிகளை அவர்கள் இன்னும் கத்தரித்து படத்தை மீண்டும் அவர்களது பார்வைக்கு அனுப்பவில்லையாம்.

மேலும், இந்த படத்தில் ஒரு காட்சியில் பாபி சிம்ஹா நிர்வாணமாக நடித்திருக்கிறாராம். அதோடு, அந்த காட்சியை ஒரே ஷாட்டில் முடிக்காமல் பல ஷாட்களை வைத்து பில்டப் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதற்கு தணிக்கைக் குழுவினர் அதிருப்தி தெரிவித்து சில ஷாட்களை கத்தரிக்க சொல்லியிருக்கிறார்களாம். ஆனால் படத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த காட்சியாக கருதப்பட்டும் அந்த நிர்வாண காட்சியை கத்தரிப்பதில்தான் படக்குழுவுக்கு பலத்த யோசனையாக உள்ளதாம். ஆக, மீண்டும் பாம்புசட்டை தணிக்கைகுழுவுக்கு அனுப்பப்படாததால் அவர்களது கைக்கு தணிக்கை சான்றிதழ் இன்னமும் வரவில்லையாம்.
Share
Banner

Post A Comment: