Propellerads
Navigation

பாகுபலி-2 முடித்த தமன்னா


தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தமன்னா. தற்போது இவர் சுராஜ் இயக்கத்தில், விஷால் உடன் நடித்துள்ள கத்திசண்டை படம் நாளை வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் கடந்தாண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி படத்தில் முக்கிய ரோலில் நடித்த தமன்னா, பாகுபலி -2 படத்திலும் நடிக்கிறார். தமன்னாவுடன் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே இப்படத்திலும் தொடருகிறார்கள். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமன்னா, தான் பாகுபலி-2 படத்தை முடித்துவிட்டதாக கூறினார்.

இதைப்பற்றி தமன்னா கூறியதாவது.... "பாகுபலி படத்தின் முதல் பாகத்தைவிட பாகுபலி-2 இன்னும் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. பாகுபலி-2 படத்தில் நான் நடித்து முடித்துவிட்டேன். ரசிகர்கள் அனைவருக்கும் இப்படம் ஒரு விருந்தாக இருக்கும். நிச்சயம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் படமாக இருக்காது" என்றார்.
Share
Banner

Post A Comment: