Propellerads
Navigation

கிளைமாக்ஸ் மட்டுமே 20 மணி நேரமா?


விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன், டி.ராஜேந்தர் உள்பட பலர் நடித்த 'கவண்' படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் கே.வி.ஆனந்த், படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை மட்டுமே சுமார் 20 மணி நேரக் காட்சிகளாக படமெடுத்துள்ளாராம்

இந்த காட்சிகள் அப்படியே தற்போது எடிட்டர் அந்தோணி ரூபனின் மேஜையில் உள்ளது. இந்த 20 மணி நேர காட்சிகளை எப்படி கட் செய்து எப்படி பேஸ்ட் செய்வது என்றே தெரியவில்லை என்றும் இந்த பணி தனக்கு கொடுக்கப்பட்ட ஒரு சவால் என்றும் சமூக வலைத்தளத்தில் ஆச்சரியத்துடன் பதிவு செய்துள்ளார்.

பிரபல எழுத்தாளர்கள் சுபாவின் கதை வசனத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஜனவரியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share
Banner

Post A Comment: