Propellerads
Navigation

நெல்லையில் 'பைரவா' படப்பிடிப்பு. விஜய் கலந்து கொண்டாரா?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் இந்த படத்தின் ஒருசில காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நெல்லையில் நடைபெற்று வருகிறது.

நெல்லையில் பந்த் நடைபெறுவதும் போலவும் இந்த பந்த்-ஆல் கடைகள் அடைக்கப்பட்டு வன்முறை ஏற்படுவதும் போலவும் ஆட்டோ ஒன்று தீயில் எரிவதும் போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டதாக தகவல் இல்லை.

'அழகிய தமிழ்மகன்' இயக்குனர் பரதன் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய், கீர்த்திசுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்த படத்தை விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
Share
Banner

Post A Comment: