பிரபல ஒளிப்பதிவாளர், நடிகர், இயக்குனர் சுரேஷ் மேனனை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. நடிகை ரேவதியின் முன்னாள் கணவரான இவர் கடந்த 1993ஆம் ஆண்டு வெளிவந்த 'புதிய முகம்' படத்தில் நடித்து அந்த படத்தை இயக்கியும் இருந்தார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் சுரேஷ் மேனன் நடிக்கவுள்ளார். இந்த தகவலை சுரேஷ் மேனன் உறுதி செய்துள்ளார்.
இந்த படத்தில் தான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவில்லை என்றும் படம் முழுவதும் வரும் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக சுரேஷ் மேனன் கூறினார். மேலும் தனது கேரக்டர் குறித்து இதற்கு மேல் தற்போதைக்கு சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இம்மாத இறுதியில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
'தானா சேர்ந்த கூட்டம்' படம் மட்டுமின்றி இன்னொரு படத்திலும் சுரேஷ் மேனன் நடிக்கவுள்ளார். ஷங்கர் உதவியாளர் வெங்கட் இயக்கவுள்ள '4G' என்ற படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ் என்பது நாம் அறிந்ததே.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: