வாரிசு நடிகையின் வரவு. ஒன்பது தாராவின் தொடர் ஆதிக்கம் இனிப்பு கடை நடிகையும், தமன்ன நடிகையும் சம்பளத்தை குறைத்தது... என பல விஷயங்கள் பப்ளிமாஸ் நடிகையின் மார்கெட்டை கணிசமாக குறைத்து விட்டது. ஒரே ஒரு படத்தை கையில் வைத்திருக்கும் நடிகை அடுத்த படத்துக்கு வாய்ப்பு கேட்டு தயாரிப்பாளர்களையும், இயக்குனர்களையும், ஹீரோக்களையும் அப்ரோச் பண்ணி வருகிறார்.
தான் பீக்கில் இருக்கும்போது அப்போது சாதாரண நடிகராக இருந்த வருத்தப்படாத யூனியன் தலைவருக்கு ஜோடியாக நடித்தார் அல்லவா அந்த நன்றி நடிகருக்கு இருக்கும் என்ற நினைப்பில் அவரை அப்ரோச் பண்ண, நர்ஸ் நடிகரும் மனது நெகிழ்ந்து ஓகே சொல்லிவிட்டார். ரவியான இன்ஷியல் இயக்குனர் இயக்கும் படத்தில் சீனாகானாவுக்கு ஜோடி பப்ளிமாஸ்தான். விட்ட இடத்தை பிடித்த மகிழ்ச்சியில் இருக்கிறார் பம்ளிமாஸ்.
Post A Comment: