Propellerads
Navigation

படப்பிடிப்பின் போது 2 நடிகர்கள் உயிரிழப்பால் பெரும் சோகம் [வீடியோ]

பெங்களூரு ராம்நகர் அருகேயுள்ள திப்பகொண்டனஹல்லி நீர்தேக்கத்தில் ’மஸ்டிகுடி’ என்ற திரைப்படம் படமாக்கப்பட்டது. இந்த உதய் மற்றும் அனில் இருவரும் வில்லன் வேடம் ஏற்று நடித்துள்ளனர். இதன் கிளைமேக்ஸ் காட்சிக்காக, ஹெலிகாப்டரில் இருந்து தண்ணீரில் குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டது.

அப்போது திரைப்பட கலைஞர் உதய், அனில் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். படமாக்கப்பட்ட திப்பகொண்டனபள்ளி நீர்தேக்கத்தில் படபிடிப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், அனில் மற்றும் உதய் இருவரும் முறைப்படி நீச்சல் கற்றுக்கொள்ளாதவர்கள் என்று கூறப்படுகிறது.

மூன்றாவதாக குதித்த துனியா விஜய் என்பவர் மட்டும் நீச்சல் தெரிந்திருந்ததால், அவர் தப்பி சென்று கரையேறினார். ஆனால், அவர்கள் இருவராலும் கரையேற முடியவில்லை.

இந்த சம்பவத்தை வைத்து பார்க்கையில் படபிடிப்புக் குழுவினர் பல விதிமுறைகளை மீறியதாக தெரிகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Share
Banner

Post A Comment: