மூன்று வித்தியாசமான வேடங்களில் கார்த்தி நடித்துள்ள 'காஷ்மோரா' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் நாயகியாக நயன்தாரா நடித்திருந்த போதிலும் முக்கிய வேடத்தில் ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார்.
இந்நிலையில் காஷ்மோரா'வில் ஸ்ரீதிவ்யா தனது கேரக்டர் குறித்து சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். அதில், 'இந்த படத்தில் தனது கேரக்டர் பெயர் யாமினி என்றும், காஷ்மோரா கேரக்டர் கார்த்தியின் ரகசியங்கள் தனக்கு மட்டுமே தெரியும் கேரக்டர் என்றும் கூறிய ஸ்ரீதிவ்யா, நடிப்பு, காமெடி ஆகியவற்றுக்கு நல்ல ஸ்கோப் உள்ள கேரக்டர் என்றும் கூரியுள்ளார்.
இதுவரை ஹோம்லி லுக்கில் நடித்த தனக்கு முதன்முதலாக கிடைத்த வெஸ்டர்ன் லுக் கேரக்டர் என்றும் தன்னுடைய கேரக்டர் செம ஸ்டைலிஷாக வந்துள்ளதாகவும் பெருமையாக கூறினார்.
இந்த படத்தில் தான் முதல் பாதியான மிஸ்டரி போர்ஷனிலும், இரண்டாவது பாதியான ஹிஸ்டாரிக்கல் போர்ஷனில் நயன்தாரா நடித்திருப்பதாகவும் ஸ்ரீதிவ்யா மேலும் கூறியுள்ளார்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: