ஜேம்ஸ்பாண்ட் பட நடிகர் பியர்ஸ் பிராஸ்னன் அவர்களை தெரியாதவர்கள் இருக்க முடியாது. பல ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமான பியர்ஸ் பிராஸ்னன் சமீபத்தில் 'பான் பஹார்' என்ற விளம்பர படத்தில் நடித்துள்ளார்.
இந்த விளம்பரம் சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பாக பரவி வரும் நிலையில் இந்த விளம்பர படம் குறித்த ஆச்சரிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அது, இந்த விளம்பர படத்திற்கு இசையமைத்தவர் கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா.
60 நொடிகள் ஓடும் இந்த விளம்பர படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா உபயோகப்படுத்தி இருக்கும் 'வயோலா' ரக இசை கருவியும், 'கியூபா' நாட்டின் பிரசித்தி பெற்ற 'மாம்போ' தாளங்களும், ரசிகர்களுக்கு ஒரு 'ஜேம்ஸ் பாண்ட்' படத்தை பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகர் பியர்ஸ் பிராஸ்னனிற்காக யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் செய்தி, தற்போது இந்திய திரையுலகினரின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: