நாகசைதன்யாவை சமந்தா காதலித்து வருகிறார். அடுத்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். இந்த நிலையில் சமந்தா கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறிவிட்டதாக கூறப்பட்டது. புரோகிதர்களுடன் இருவரும் நிற்கும் புகைப்படங்களும் வெளியாகின.
இந்த படங்கள் நாகசைதன்யா வீட்டில் நடந்த குடும்ப பூஜை தொடர்பானது என்று இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சமந்தா இந்து மதத்துக்கு மாறிவிட்டாரா... என்பதற்கு நாகசைதன்யா விளக்கம் அளித்திருக்கிறார். இது பற்றி கூறிய அவர்,
“சமந்தா இந்து மதத்துக்கு மாறிவிட்டார் என்று வெளியான செய்திகளில் உண்மை இல்லை. அப்படி எதுவும் நடக்கவில்லை. நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை. அவர் எந்த மதம் என்பது பற்றி கவலை இல்லை. அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே இருக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: