பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா தற்போது 'எஸ்3' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். இந்த படத்தை அடுத்து அவர் விக்னேஷ் சிவன் இயக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டே உள்ளது. முதலில் நயன்தாரா நடிப்பார் என்றும் அதன் பின்னர் கீர்த்திசுரேஷ் நடிப்பார் என்றும் கூறப்பட்ட நிலையில் இன்று காலை முதல் இந்த படத்தில் ஹன்சிகா நடிப்பார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது.
ஆனால் இந்த செய்தியை ஹன்சிகா மறுத்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடிக்க என்னிடம் யாரும் அணுகவில்லை. இது முழுக்க முழுக்க வதந்தியே. எனவே இந்த வதந்தியை உடனே நிறுத்தி கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளார். இதன் மூலம் கடந்த சில மணி நேரங்களாக பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...

Post A Comment: