Propellerads
Navigation

நாகசைதன்யா-சமந்தா காதலை முதன்முதலில் தெரிந்து கொண்ட வில்லன் நடிகர்

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தாவுடன் காதல் செய்து வருவதும், இருவரும் விரைவில் முறைப்படி திருமணம் செய்ய இருப்பதும் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் நாக சைதன்யா தனது காதலை முதன்முதலில் யாரிடம் தெரிவித்தார் தெரியுமா, அவருக்கு நெருங்கிய உறவினராகவும் நண்பராகவும் இருந்து வரும் 'பாகுபலி' வில்லன் ராணாவிடம் தானாம்.

தனது வாழ்க்கையில் நடக்கும் எந்த ஒரு விஷயத்தையும் தான் ராணாவுடன் பகிர்ந்து கொள்வதாகவும், அதைப்போலவே தனது பெற்றோர்களுக்கு தெரியும் முன்பே, ராணாவிடம் இந்த விஷயத்தை நாகசைதன்யா கூறியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சமந்தா சமீபத்தில் இந்து மதத்திற்கு மாறியதையும் நாக சைதன்யா மறுத்துள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு பூஜையில் சமந்தா கலந்து கொண்டதாகவும், அந்த புகைப்படத்தை பார்த்து ஒருசிலர் வதந்தியை கிளப்பி விட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
Share
Banner

Post A Comment: