பிரபல நடிகரும் முன்னாள் நடிகர் சங்க துணைத்தலைவருமான கே.என்.காளை, நேற்று மாரடைப்பால் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 84.
சுமார் 100 திரைப்படங்களுக்கும் மேல் தமிழ் சினிமாவில் நடித்துள்ள இவர் கடைசியாக சசிகுமார் நடித்த 'கிடாரி' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
முன்னாள் நடிகர் சங்க தலைவர்களான விஜயகாந்த் மற்றும் சரத்குமாருக்கு நெருக்கமானவராக இருந்த கே.என்.காளை, முன்னாள் நடிகர் சங்க செயலாளர் ராதாரவியுடன் நெருங்கிய நட்பு கொண்டவர்.
தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெற்ற கே.என்.காளைக்கு மலேசிய அரசும் சிறப்பு விருதினை அளித்துள்ளது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: