Propellerads
Navigation

விஜய்சேதுபதிக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

இந்த ஆண்டின் கோலிவுட் வெற்றி நாயகன் என்றால் அது விஜய்சேதுபதி என்று உடனே கூறிவிடலாம். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை அவர் நடிப்பில் சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க என ஆறு படங்கள் வெளிவந்துள்ளது. இன்னும் 'இடம் பொருள் ஏவல்' மற்றும் மெல்லிசை' விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் விஜய்சேதுபதி தயாரித்த 'ஆரஞ்சு மிட்டாய்' திரைப்படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்த நிலையில் இரண்டாவது தயாரிப்பாக 'மேற்கு தொடர்ச்சி மலை' என்ற படத்தை அவர் தயாரித்து வருகிறார்.

லெனின் பாரதி இயக்கி வரும் இந்த படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்து வரும் நிலையில் இந்த படம் தற்போது கேரளாவில் நடைபெறவுள்ள 21வது சர்வதேச கேரள திரைப்பட விழாவில் கலந்துகொள்ள தேர்வு பெற்றுள்ளது.

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: