சூப்பர் ஹிட் வெற்றி படமான 'பிரேமம்' படத்தில் மலர் டீச்சர் கேரக்டரில் நடித்த நடிகை சாய்பல்லவி, அந்த ஒரே ஒரு படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆனார்.
இந்நிலையில் சாய்பல்லவி விரைவில் தமிழில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மணிரத்னம் இயக்கி வரும் 'காற்று வெளியிடை படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால் திடீரென சாய்பல்லவிக்கு பதிலாக அதிதி ராவ் அந்த படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது சந்தானம் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தின் நாயகியாக சாய்பல்லவி நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.
சந்தானம் சமீபத்தில் விடிவி புரடொக்ஷன்ஸ் நிறுவனத்தின் '4G' படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அதே நேரத்தில் செல்வராகவன் தற்போது 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணியில் உள்ளார். இருப்பினும் சந்தானம்-செல்வராகவன் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: