மிக குறுகிய காலத்தில் கோலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து தனி பாணியில் இசைப்பயணம் செய்து வரும் அனிருத் இன்று தனது 26வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அவரது நண்பர்கள் மற்றும் திரையுலகினர்களிடம் இருந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் நம்முடைய உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய '3' படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் அனிருத். முதல் படத்திலேயே அவர் கம்போஸ் செய்த 'வொய் திஸ் கொலைவெறி' பாடல் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ் மொழியை தெரியாதவர்கள் கூட அந்த பாடலின் டியூனுக்காக ரசித்தனர்.
முதல் படத்திலேயே தனது முத்திரையை அழுத்தமாக பதிவு செய்த அனிருத் மிக குறுகிய காலத்திலேயே விஜய், அஜித் ஆகிய மாஸ் நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார். விஜய் நடித்த 'கத்தி' மற்றும் அஜித் நடித்த 'வேதாளம்' ஆகிய படங்களுக்கும் அவர் கம்போஸ் செய்த பாடல்கள் மாபெரும் வரவேற்பை பெற்றது.
சிவகார்த்திகேயனுடன் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கும் அனிருத் அவர் நடித்த 'எதிர்நீச்சல்,' மான் கராத்தே, காக்கி சட்டை, ரெமோ ஆகிய படங்களுக்கு இசையமைத்ததோடு அவர் அடுத்து நடிக்கவுள்ள மோகன்ராஜா இயக்கும் படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்.
தல 57, சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' உள்பட ஒருசில படங்களில் தற்போது இசையமைத்து வரும் அனிருத், இசையுலகில் மிகப்பெரிய சாதனை செய்து மென்மேலும் புகழ் பெற இந்த இனிய பிறந்த நாளில் மீண்டும் ஒருமுறை அவரை வாழ்த்துகிறோம்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: