Propellerads
Navigation

வேதாளம்' ரீமேக்கை இயக்கும் விஜய்யின் சூப்பர் ஹிட் பட இயக்குனர்


இளையதளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான 'ஜில்லா' படத்தை இயக்கிய ஆர்.டி.நெல்சன் தற்போது தெலுங்கு பவர்ஸ்டார் பவன்கல்யாண் நடிக்கும் படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படம் அஜித் நடித்த சூப்பர் ஹிட் படமான 'வேதாளம்' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அஜித்தின் 'வீரம்' படத்தின் ரீமேக்கில் நடித்து முடித்துள்ள பவன்கல்யாண், தற்போது மீண்டும் அஜித்தின் இன்னொரு சூப்பர்ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தெலுங்கு ரசிகர்களுக்காக 'வேதாளம்' படத்தின் ஸ்கிரிப்டை இயக்குனர் நெல்சன் சற்று மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் பூஜை நேற்று ஆயுதபூஜை விழா நாளில் சிறப்பாக நடந்தது. ஐதராபாத் பிலிம் நகரில் நடைபெற்ற இந்த விழாவில் பவன்கல்யாண், நெல்சன், ஜோதிகிருஷ்ணா, உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் அவர்களின் சூர்யா மூவீஸ் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: