Propellerads
Navigation

பாலிவுட்டுக்கு செல்லும் ‘கபாலி’ விஷ்வாந்த்

ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த ‘அட்டக்கத்தி’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷ்வாந்த். இவர் சமீபத்தில் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவந்த ‘கபாலி’ படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். மலேசியாவிலிருந்து ராதிகா ஆப்தேவை தேடி சென்னைக்கு வரும் ரஜினி, தன்ஷிகாவுக்கு உதவி செய்யும் சென்னை பையனாக நடித்திருந்தார்.

இப்படத்திற்கு பிறகு கோலிவுட்டில் எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்த விஷ்வாந்துக்கு தற்போது பாலிவுட் படவாய்ப்பு கிடைத்துள்ளது. சஷோஸ் என்ற புதுமுக இயக்குனர் புதிய படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க விஷ்வாந்த் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் முன்னணி நடிகர்களும், பல புதுமுகங்களும் நடிக்கின்றனர். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை விரைவில் வெளியிடவுள்ளனர்.

பாலிவுட் படத்தில் நடிப்பது குறித்து விஷ்வாந்த் கூறும்போது, சஷோஸ் ‘கபாலி’ படத்தில் என்னுடைய நடிப்பை பார்த்துவிட்டு இப்படத்தில் நடிக்க என்னை அழைத்தார். இப்படத்தில் நான் தமிழ் பேசும் ஐடி பையனாக வருகிறேன். பாலிவுட் படமென்றாலும் என்னுடைய கதாபாத்திரம் தமிழ் பேசுவதாகவே இருக்கும். மும்பை, பெங்களூரு ஆகிய இடங்களில் படமாக்க உள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க திரில்லர் படமாக உருவாகவிருக்கிறது என்றார்.
Share
Banner

Post A Comment: