Propellerads
Navigation

விஜய்-அட்லி படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு தேதி?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் விஜய்யின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இருப்பினும் 'தெறி' சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின்னர் மீண்டும் விஜய்-அட்லி இணைவது உறுதியாகியுள்ளது. இந்த படத்தின் ஸ்கிரிப்ட் தற்போது ஒப்புதல் பெற்றுள்ளதாகவும், விஜய்யின் 61வது படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் தீபாவளிக்கு பின்னர் அறிவிக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளீயாகியுள்ளது.
Share
Banner

Post A Comment: