Propellerads
Navigation

'2.0' படக்குழுவின் முக்கிய விழாவில் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது என்பதையும், இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் நவம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் '2.0' படக்குழுவினர் நேற்று ஆயுதபூஜை விழாவை சென்னையில் சிறப்பாக கொண்டாடினர். இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், நாயகி எமிஜாக்சன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் லைகா நிறுவனத்தின் ராஜூமகாலிங்கம் அவர்களும் கலந்து கொண்டார். இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். 'கடவுள் எங்களை ஆசிர்வதிக்கட்டும்' என்று அவர் தனது சமூகவலைத்தளத்தில் கூறியுள்ளார்.
Share
Banner

Post A Comment: