Propellerads
Navigation

'ரெமோ', 'றெக்க', 'தேவி' படங்களின் சென்னை வசூல் விபரங்கள்

ஆயுத பூஜை விடுமுறை உள்பட 5 நாட்கள் தொடர் விடுமுறை வாரத்தில் சிவகார்த்திகேயனின் 'ரெமோ', விஜய்சேதுபதியின் 'றெக்க' மற்றும் இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் 'தேவி' ஆகிய மூன்று படங்கள் வெளியாகி மூன்றுமே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படங்களின் வார இறுதி நாட்களின் சென்னை வசூல் குறித்து தற்போது பார்ப்போம்,.

சிவகார்த்திகேயனின் ரெமோ' சென்னையில் அக்டோபர் 7 முதல் 9 வரையிலான நாட்களில் 23 திரையரங்க வளாகங்களில் 364 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,74,24,980 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 95% பார்வையாளர்கள் நிரம்பியிருந்ததால் சிவகார்த்திகேயனின் பெஸ்ட் ஓப்பனிங் என்று இந்த படத்தை கூறலாம்.

விஜய்சேதுபதியின் 'றெக்க' திரைப்படம் சென்னையில் 21 திரையரங்க வளாகங்களில் 218 காட்சிகள் திரையிடபட்டு ரூ.65,90,180 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 85% பார்வையாளர்கள் நிரம்பியிருந்ததால் இந்த படத்திற்கு சென்னை ரசிகர்கள் நல்ல ஆதரவு கொடுத்துள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.

இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்த 'தேவி' திரைப்படம் சென்னையில் 13 திரையரங்க வளாகங்களீல் 148 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.41,77,420 வசூல் செய்து நல்ல ஓப்பனிங்கை பெற்றுள்ளது. திரையரங்குகளில் 85% பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Share
Banner

Post A Comment: