Propellerads
Navigation

ஜி.வி.பிரகாஷின் 'புரூஸ்லீ' ரிலீஸ் தேதி

ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, நிக்கி கல்ராணி நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கிய 'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் நடித்து முடித்துள்ள இன்னொரு படமான 'புரூஸ்லீ' ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு வரும் 21ஆம் தேதி நடைபெறும் என்றும், இந்த படம் வரும் நவம்பர் 11ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து படக்குழுவினர்களின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும்,.

ஜி.வி.பிரகாஷ், க்ரிதி கார்பனந்தா, ராஜேந்திரன், பாலசரவணன், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: