சமீபத்தில் நடந்த 'ரெமோ' நன்றி அறிவிப்பு விழாவில் சிவகார்த்திகேயன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு 'தயவு செய்து எங்களை வேலை பார்க்க விடுங்கள்' என்று கண்ணீருடன் கேட்டுக்கொண்ட கோரிக்கை கோலிவுட் திரையுலகையே உலுக்கியது என்பதை பார்த்தோம்.
இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு வெளிப்படையாக தனது டுவிட்டரின் மூலம் முதன்முதலில் ஆதரவு தெரிவித்தவர் சிம்பு. சிவகார்த்திகேயன் தனக்கு நெருங்கிய நண்பர் இல்லை என்றாலும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தது ஏன் என்பது குறித்து சிம்பு தற்போது விளக்கியுள்ளார்.
'வாலு' பட ரிலீசின்போதும், பீப் பாடல் பிரச்சனையின்போதும் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான போது திரையுலகில் நெருங்கிய நண்பர்கள் உள்பட யாரும் தனக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. அந்த நேரத்தில் நான் பட்ட வலி, வேதனை எனக்கு மட்டுமே தெரியும். என்னுடைய நிலைமை சிவகார்த்திகேயனுக்கும் ஏற்பட கூடாது என்பதற்காகவே அவருக்கு ஆதரவு குரல் கொடுத்தேன்' என்று கூறியுள்ளார்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: