பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான சிவகார்த்திகேயனின் ஓப்பனிங் வசூல் பிரமாதமாக இருந்ததையும், இந்த படத்தின் வார இறுதி சென்னை வசூல் குறித்த விவரங்களையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் மூன்று நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படம் தமிழகத்தில் மூன்று நாட்களில் மொத்தம் ரூ.21 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் ரூ.1.74 கோடியும், செங்கல்பட்டில் ரூ.4.85 கோடியும், கோவையில் சுமார் 3 கோடியும் திருச்சி தஞ்சையில் ரூ.2 கோடியும் வசூல் செய்துள்ளது.
அதேபோல் விஜய்சேதுபதியின் 'றெக்க' திரைப்படம் கடந்த மூன்று நாட்களில் தமிழகம் முழுவதும் சுமார் 6 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் ரூ.65 லட்சமும், செங்கல்பட்டில் ரூ.1.25 கோடியும், கோவையில் ரூ.80 லட்சமும் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: