Propellerads
Navigation

'சாமி 2' படத்தின் நாயகி இவரா?

சீயான் விக்ரம் நடித்த 'இருமுகன்' சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவரது அடுத்த படமான 'சாமி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் தொடங்கவுள்ளது.

இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படம் 'சாமி' படத்தின் அடுத்தபாகமாக உருவாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ராகுல் ப்ரித்திசிங் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ராகுல் ப்ரித்திசிங் மகேஷ்பாபு-ஏ.ஆர்.முருகதாஸ் படத்திலும், விஷால்-மிஷ்கினின் 'துப்பறிவாளன்' படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் முதல் பாகத்தில் நடித்த த்ரிஷாவும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 'இருமுகன்' படத்தயாரிப்பாளர் ஷிபுதமீன் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: