Propellerads
Navigation

ஜல்லிக்கட்டு எதிர்ப்ப்பாளர்களுக்கு செளந்தர்யா ரஜினி விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகள் செளந்தர்யா சமீபத்தில் விலங்குகள் நல வாரியத்தின் தூதுவராக நியமனம் செய்யப்பட்டார். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும் விலங்குகள் நல வாரியத்தின் தூதர் பதவியை செளந்தர்யா ஏற்கக்கூடாது என்று ஜல்லிக்கட்டு ஆதரவு சங்கங்கள் வேண்டுகோளும், எச்சரிக்கையும் மாறி மாறி அனுப்பி வந்தன.

இந்நிலையில் விலங்குகள் நல வாரியமே செளந்தர்யாவின் பணி என்ன என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளது. செள்நதர்யா அவர்கள் அனிமேஷன் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் ஆகியவற்றில் நல்ல திறமை உள்ளவர்  என்பதால்  விலங்குகள் நல வாரியம் என்னும் அமைப்பு தங்களது தூதுவராக நியமித்துள்ளதாகவும், அவருடைய பணி திரைப்படங்களில் மிருகங்களை வைத்து எடுக்கப்படும் காட்சிகள் உண்மையில் மிருகங்களை வைத்து படமாக்கப்பட்டதா? அல்லது கிராபிக்ஸ் தானா என்பதை உறுதி செய்து அறிக்கை வழங்குவது மட்டுமே என்றும் கூறப்பட்டுள்ளது.

சௌந்தர்யா ரஜினிகாந்த் அனிமேஷன் துறையில் மேல்படிப்பு படித்தவர் என்பது மட்டுமின்றி இந்தியாவின் முதல் மோஷன் கேப்ட்சர் திரைப்படமான கோச்சடையான் என்னும் அனிமேஷன் படத்தை இயக்கிய அனுபவம் உள்ளவர் என்பதால் அவரை விலங்குகள் நல வாரியம் இப்பணியில் அமர்த்தியுள்ளதாகவும் விளக்கியுள்ளது.

மற்றபடி விலங்குகள் நலத்துறையின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கும் அவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த விளக்கத்தை ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Share
Banner

Post A Comment: