Propellerads
Navigation

'வாஹா' சென்சார் தகவல்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் கலையுலக வாரிசும், வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகருமான விக்ரம்பிரபு நடித்து முடித்துள்ள 'வாஹா' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று காலை வெளிவந்துள்ளது. இந்நிலையில் இந்த படம் இன்று சென்சார் செய்யப்பட்டது.

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படமாக்கப்பட்ட ராணுவம் சம்பந்தப்பட்ட இந்த படத்தில் விக்ரம் பிரபுவுடன் ரான்யா ராவ், துளசி, கருனாஸ், அஜய்ரத்னம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த படம் இன்று சென்சார் ஆகியுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி சென்சாரின்போது இந்த படத்தை பார்த்த ராணுவ அதிகாரிகள் படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படம் சென்சார் ஆகிவிட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.  மேலும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை காஸ்மோ சிவா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: