சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப்படம் கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் பெருவாரியான வசூலை குவித்தது. இன்று இந்த படம் 25வது நாள் என்ற மைல்கல்லை எட்டியுள்ள நிலையில் இந்த படத்தின் சென்னை வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
சென்னையில் 'கபாலி' திரைப்படம் கடந்த வார இறுதி நாட்களில் 15 திரையரங்குகளில் 110 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.27,01,440 வசூலாகியுள்ளது. திரையரங்குகளில் 80% பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை சென்னையில் 'கபாலி' திரைப்படம் மொத்தம் ரூ.11,88,04,610 வசூலாகியுள்ளது. சென்னையில் இதுவரை வெளியான திரைப்படங்களில் 'கபாலி'தான் அதிக வசூல் செய்து புதிய சாதனை செய்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: