Propellerads
Navigation

இன்னொரு முகன்யார் ?


ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஹாரிஜ் ஜெயராஜ் இசையமைப்பில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்கும் 'இருமுகன்' படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. 

ஒரு வித்தியாசமான ஆக்ஷன் படமாக இந்தப் படம் இருக்கும் என்று டிரைலரைப் பார்த்ததும் அனைவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

படம் ஆரம்பமான போதே இந்தப் படத்தில் விக்ரம் இரு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்றும் அதில் ஒரு கதாபாத்திரம் திருநங்கை கதாபாத்திரம் என்றும் தகவல்கள் வெளியாகின. 

ஆனால், படத்தின் இயக்குனர் ஆனந்த் சங்கர், விக்ரம் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என இன்னமும் சஸ்பென்ஸ் வைக்கிறார்.

டிரைலரில் விக்ரமின் இரு கதாபாத்திரங்களில் ஒன்று பெண் தோற்றத்தில் இருக்கிறது. அப்படியென்றால் அது முழுமையான பெண் கதாபாத்திரமாகவே இருக்க வேண்டும். அதாவது விக்ரம் பெண் கதாபாத்திரத்திலேயே நடித்திருக்க வேண்டும். 

அல்லது பெண்மை மீது அதிக ஈடுபாடு கொண்ட ஒரு ஆணாக இருக்க வேண்டும். 'திருநங்கை' கதாபாத்திரங்கள் தமிழ் சினிமாவில் இதற்கு முன் 'அப்பு, ஆதிபகவன்' ஆகிய படங்களில் வந்துவிட்டதால் அதே கதாபாத்திரத்தை இயக்குனர் ஆனந்த் சங்கர் இந்தப் படத்திலும் வைத்திருக்க மாட்டார்.

அதே சமயம் டிரைலரில் விக்ரமின் 'பெண்' கதாபாத்திரத் தோற்றம் 'ஃபார் கிரை 4' வீடியோ கேமில் வில்லனாக வரும் பாகன் மின் கதாபாத்திரம் போல இருப்பதாகவும் ஒரு பேச்சு எழுந்துள்ளது. 

எப்படியோ இன்னமும் அந்த இன்னொரு 'முகன்' கதாபாத்திரத்தின் சஸ்பென்சை இயக்குனர் அப்படியே காப்பாற்றி வருகிறார்.
Share
Banner

Post A Comment: