விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘இருமுகன்’. இப்படத்தில் இரு வேறு வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து அசத்தியிருக்கிறார் விக்ரம். படங்களில் வித்தியாச வேடமேற்று நடித்திருக்கும் இவருக்குள்ளும் ஒரு இயக்குனர் ஒளிந்துகொண்டுதான் இருக்கிறார்.
சென்னை பெருவெள்ளத்தின் போது ஏற்பட்ட பாதிப்புகளை ஒரு பாடலாக உருவாக்கி, அந்த பாடலில் பல்வேறு நடிகர்களை வைத்து இயக்கியிருந்தார் விக்ரம். அந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, தற்போது அவருக்கும் படத்தை இயக்கும் ஆசை துளிர்விட்டுள்ளது.
அவர் அப்படி படம் இயக்குவதென்றால், விஜய் அல்லது ஜெயம் ரவியை வைத்துதான் படம் இயக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். விக்ரம் தனது மகன் துருவ்வை வைத்து படம் இயக்க ஆசை இருந்தாலும், அவன் இன்னும் அதற்கு தயாராகததால் இப்போதைக்கு இந்த முடிவு என்று கூறியுள்ளார். விக்ரமின் இந்த ஆசையை விஜய்யும், ஜெயம் ரவியும் நிறைவேற்றுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: