Propellerads
Navigation

70 வருடம் - 7 நிமிடம். சாந்தனு பாக்யராஜின் புதிய முயற்சி

இந்தியாவின் சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவரான கே.பாக்யராஜின் ஒரே மகன் சாந்தனு பாக்யராஜ், கோலிவுட்டில் ஒருசில படங்களில் நடித்திருந்தபோதிலும், அவர் எதிர்பார்த்த வெற்றி இன்னும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஒரே ஒரு வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கும் சாந்தனுவுக்கு விரைவில் வெளிவரவுள்ள 'வாய்மை' படம் நம்பிக்கையை அளித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 70வது சுதந்திர தினத்தை இந்தியர்கள் அனைவரும் கொண்டாடும் நிலையில் 7 நிமிட பாடல் ஒன்றை 'வாய்மை' படக்குழுவினர் வெளியிடவுள்ளனர். இதுகுறித்த தகவலுடன் கூடிய போஸ்டர் ஒன்று சற்று முன்னர் இணணயதளங்களில் வெளியாகியுள்ளது

சாந்தனு, கவுண்டமணி, ராம்கி, முக்தாபானு, தியாகராஜன், பிரித்விராஜ், ஊர்வசி, பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.
Share
Banner

Post A Comment: