Propellerads
Navigation

கரீனா கர்ப்பம்... சைப்பின் முதல் மனைவி கோபம்


பாலிவுட் நடிகரான சைப் அலிகானுக்கு ஏற்கனவே இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்நிலையில், சைப் அலிகான் தன் முதல் மனைவி அம்ரிதாவை விவாகரத்து செய்த பின்னர் நடிகை கரீனா கபூரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடித்து வந்த கரீனாவைப்பற்றி அவ்வப்போது அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தி வந்தது. ஆனால் இதை சைப்-கரீனா இருவருமே மறுத்து வந்தனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தன் மனைவி கரீனா, கர்ப்பமாக இருப்பதாகவும், டிசம்பரில் குழந்தை பிறக்கும் என்று சைப் அலிகானே அறிவித்தார். கரீனா, கர்ப்பமாக இருக்கும் விஷயம் அவரது குடும்பத்தாரை மட்டுமல்லாது, பாலிவுட் திரையுலகினர் மத்தியிலும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பல திரையுலக பிரபலங்கள் கரீனா-சைப்பிற்கு வாழ்த்து தெரிவித்த வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் ஒருவருக்கு மட்டும் இந்த விஷயம் மகிழ்ச்சிகரமாக இல்லை. அவர் தான் சைப்பின் முதல் மனைவி அம்ரிதா சிங்.

கரீனா, கர்ப்பமாக இருக்கும் செய்தி குறித்து அம்ரிதாவிடம் ஒருவர் போன் போட்டு கேட்க, அவர் சற்றே கோபமாகிவிட்டாராம். உங்களுக்கு எவ்வளவு தைரியம், என்னிடம் இந்த கேள்வியை கேட்பீர்கள், நீங்கள் யார்?, இனிமேல் இதைப்பற்றி என்னிடம் எதுவும் பேச வேண்டாம் என்று கோபமாக கூறிவிட்டாராம்.
Share
Banner

Post A Comment: