மலையாளத்தில் சில படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்திருப்பவர் ஐஸ் வர்யாமேனன். இவர் கழுகு கிருஷ்ணா நடிக்கும் வீரா படத்தில் நாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடி வடைந்த நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்காக சிறிய கேப் கொடுத் துள்ளனர். அதனால், இந்நிலையில், புதிய படங்களில் நடிப்பது சம்பந்தமாகவும், தமிழ், தெலுங்குப்பட டைரக்டர்களை சந்தித்து படவேட்டை நடத்திக்கொண்டி ருக்கிறார் ஐஸ்வர்யாமேனன்.
மேலும், தமிழில் முதல் படத்திலேயே பர்பாமென்ஸ்ரீதியாக நல்ல நடிகை என்கிற பெயரை எடுத்து விட வேண்டும் என்பதற்காக, வீரா படத்தில் நடிப்பதற்கு முன்பே தனக்கான கதாபாத்திரம் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு அதற்காக தன்னை தயார்படுத்தி களமிறங்கிய ஐஸ்வர்யாமேனன், இப்போது கிடைத்திருக்கும் கேப்பில் அடுத்தகட்ட படப்பிடிப்பில் தனக்கு வெயிட்டான காட்சிகள் இருப்பதால் அந்த காட்சிகள் பற்றி டைரக்டரிடம் கேட்டறிந்து வீட்டில் இருந்தபடியே ஹோம்ஒர்க் செய்து கொண்டிருக்கிறாராம்.
இப்படி முதல் படத்தில் ஹோம்ஒர்க் செய்யும் ஐஸ்வர்யாமேனன், எதிர்காலத்தில் தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களுக்காகவும் இதேபோன்று ஹோம்ஒர்க் செய்து நடிக்க திட்டமிட்டுள்ளாராம். நடிப்பைப்பொறுத்தவரை ஒவ்வொரு படத்திலும் புதுமுக நடிகை என்கிற மனநிலையில் செயல்பட முடிவு செய்திருக்கிறாராம் அவர்.
Post A Comment: