Propellerads
Navigation

பூஜையுடன் துவங்கியது ‛அஜித்-57'


சிறுத்தை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர் சிவா, தொடர்ந்து அஜித்தை வைத்து வீரம், வேதாளம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்துவிட்டார். இப்போது மூன்றாவது முறையாக இந்தக்கூட்டணி இணைந்துள்ளது. அஜித்தின் 57-வது படமாக உருவாகவுள்ள இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை, அதனால் அஜித்-57 என்ற பெயரிலேயே இப்பட செய்திகள் வெளிவருகிறது.

காலில் ஏற்பட்ட பிரச்னையால் ‛வேதாளம்' படத்திற்கு பிறகு ஆபரேஷன் செய்து கொண்ட அஜித், கடந்த சில மாதங்களாக ஓய்வு எடுத்து வந்தார். இந்த இடைவெளியில் அஜித்தின் 57 படத்தின் கதை, திரைக்கதையை முடித்துவிட்டார் இயக்குநர் சிவா முடித்துவிட்டார்.

இந்நிலையில், ‛அஜித்-57' படம் இன்று பூஜையுடன் ஆரம்பமானது. வழக்கம் போல அஜித் பங்கேற்கவில்லை. இயக்குநர் சிவா, இசையமைப்பாளர் அனிருத், ஸ்டண்ட் சில்வா, ஒளிப்பதிவாளர், இப்படத்தை தயாரிக்கும் சத்ய பிலிம்ஸ் டிஜி தியாகராஜன் மற்றும் அவரது மகன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

படத்திற்கு இன்று பூஜை போட்டாலும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு துவங்கும் என தெரிகிறது.
Share
Banner

Post A Comment: