Propellerads
Navigation

அலிஷா அப்துல்லா திருமண நிச்சயதார்த்தம் சிறப்பாக நடைபெற்றது


பிரபல பெண் பைக் ரேசர்களுள் அலிஷா அப்துல்லாவும் ஒருவர் என்பது அனைவரும் அறிந்து. இவர் அதர்வா நடித்த இரும்புக்குதிரை படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். தற்போது அலிஷா அப்துல்லா விஜய் ஆண்டனியின் சைத்தான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் .

இந்நிலையில் அலிஷா அப்துல்லா நவீன் தேவன்ராஜ் இருவருக்கும் சென்னை அருகேயுள்ள மாமல்லபுரத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தம் தகவலை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார் அலிஷா . தனது திருமண நிச்சயதார்த்ததிற்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இருவர் வீட்டாரும் , நெருக்கமான நண்பர்கள் மட்டுமே இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களது திருமணம் வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதி நடைபெறும் என்று அலிஷா அப்துல்லா கூறியுள்ளார்.
Share
Banner

Post A Comment: