தணிக்கை விவகாரத்தில் சென்சார் போர்டை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்று, கடைசியில் ‘ஏ’ சான்றிதழோடு நாளை வெளியாகவிருக்கும் படம் ‘உத்தா பஞ்சாப்’. இப்படத்தின் விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், பலரும் ‘உத்தா பஞ்சாப்’ படக்குழுவினருக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நாளை இப்படத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட முடிவு செய்திருந்த நிலையில், நேற்று மதியமே இப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இணையதளத்தில் இருந்து இப்படத்தை நீக்கியுள்ளனர்.
இணையதளத்தில் இருந்து நீக்கிவிட்டாலும் இந்த விஷயத்தால் படக்குழுவினர் மிகவும் அதிர்ந்து போயுள்ளனர். இப்படத்தில் ஷாகித் கபூர், ஆலியா பட், கரீனா கபூர் போன்ற பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை அபிகேஷ் சௌபி இப்படத்தை இயக்கியுள்ளார்.


Post A Comment: