பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே, இந்தி மட்டுமின்றி பெங்காலி, மராத்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்து விட்டுத்தான் தென்னிந்திய மொழிகளில் நடிக்க வந்தார். தான் இயக்கி நடித்த தோனி படத்திற்காகத்தான் அவரை தமிழுக்கு அழைத்து வந்தார் பிரகாஷ்ராஜ்.
அதன்பிறகு ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிசெல்வன் என சில படங்களில் நடித்த ராதிகா ஆப்தே, யாரும் எதிர்பார்க்காத வகையில் இப்போது ரஜினியின் கபாலி படத்தில் அவரது மனைவியாக நடித்துள்ளார். குறிப்பாக, இதுவரை அவர் மாடர்ன் கெட்டப்புகளிலேயே நடித்திருக்க முதன்முறையாக இந்த கபாலியில் ஸ்லம் ஏரியா பெண்ணாக நடித்துள்ளார்.
மேலும், கபாலி படத்தைப்பொறுத்தவரை இளமைகால ரஜினியின் மனைவியாக நடித்துள்ள ராதிகா ஆப்தே நடித்திருப்பது குறைவான காட்சிகள்தானாம். என்றாலும் ரஜினி படத்தில் நடித்திருப்பது அவருக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
அதோடு மட்டுமின்றி, இந்தியில் பல படங்களில் நடித்து விட்ட ராதிகா ஆப்தே, தற்போது இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வருகிறாராம். அதனால் கபாலி படத்தில் இந்தி பதிப்பின் பப்ளிசிட்டி போஸ்டர்களில் ரஜினிக்கு இணையாக அவரது போட்டோவும் இடம்பெற்று வருகிறதாம்.


Post A Comment: