Propellerads
Navigation

காதல் திருணம் செய்த விசாகா சிங்?


2008ல் வெளிவந்த 'பிடிச்சிருக்கு'படத்தில் அறிமுகமானாலும் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் மூலம்தான் அதிகம் அறியப்பட்டவர் விசாகா சிங். தொடர்ந்து சிறப்புத் தோற்றத்தில் 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்திலும், 'வாலிப ராஜா' படத்திலும் நடித்தார். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படம் பெரிய வெற்றியைப் பெற்றாலும் தொடர்ந்து பெரிதாக எந்த வாய்ப்புகளும் விசாகாவுக்கு வரவில்லை.

தற்போது விசாகா சிங் பற்றிய காதல் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அவருக்கும் விக்ராந்த் ராவ் என்பவருக்கும் காதல் என்றும், விக்ராந்தின் பிறந்த நாளுக்கு அவருடைய பிறந்த நாள் வாழ்த்தில் கூட தங்களது காதலைப் பற்றி விசாகா அழுத்தமாக குறிப்பிட்டிருந்தார் என்றும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது பற்றி மேலும் விசாரித்த போது அவர்கள் இருவரும் தற்போது காதலித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் எப்படியும் அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் சொல்கிறார்கள். ஹீரோயின்களுக்கு வாய்ப்புகள் குறையும் போது வேறு என்னதான் செய்ய முடியும். திருமணம் ஒன்றுதான் அவர்களுக்குத் திருப்புமுனையைத் தரும்.
Share
Banner

Post A Comment: