பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த தீபிகா படுகோனே, இப்போது ஹாலிவுட்டிலும் அசத்தி வருகிறார். தற்போது அவர் வின் டீசல் உடன் 'டிரிபிள் எக்ஸ்' படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஐபா 2016 விருது வழங்கும் நிகழ்ச்சியில் தீபிகா பங்கேற்றார். அப்போது தனது ஹாலிவுட் பயணம் குறித்து பேசினார். அதில், பாலிவுட்டில் எனக்கு முன்பே பட வாய்ப்பு வந்தது. ஆனால் அப்போது அதற்கான நேரம் அமையவில்லை. ஹாலிவுட் வாய்ப்பு வந்தபோது எனது மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஒரு நடிகையாக நான் எவ்வித சவாலுக்கும் தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.
தற்போது தீபிகா, வின் டீசல் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். பாலிவுட் வாய்ப்பு எதையும் ஒப்புக்கொள்ளவில்லை.
Post A Comment: