இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் அவரது 57ஆவது திரைப்படத்தில் வில்லனாக நடிகர் சசிக்குமார் நடிப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.பாலாவின் தாரைத்தப்பட்டை திரைப்படத்தில் வில்லனாக நடித்த ஆர்.கே. சுரேஷ், அஜீத் திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதாக முன்னதாக செய்தி வெளியாகியிருந்தது.
இந்நிலையில், நாயகன் சசிகுமார் முக்கிய வில்லனாக நடிப்பதாக இன்னொரு பரபரப்பு செய்தி பரவியுள்ளது.
சுப்ரமணியபுரம் திரைப்படத்தை இயக்கி நடித்த சசிகுமார், இப்போது வரை நாயகனாகத்தான் நடித்து வருகிறார். அதனால் தற்போது இந்த செய்தி பரவியிருப்பது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
அரவிந்த்சாமி, அருண்குமார் வரிசையில் சசிகுமாரும் ஒரு மாற்றத்துக்காக வில்லனாக நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

Post A Comment: