Propellerads
Navigation

ஐதராபாத்தில் படப்பிடிப்பை முடித்த விஜய் 60 படக்குழு

தெறி படத்திற்குப் பிறகு விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் ஜெகபதி பாபு, ஸ்ரீமன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘விஜய் 60’ என்று அழைத்து வருகிறார்கள்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நெல்லையில் நடைபெற்றது. அடுத்த கட்டமாக ஐதராபாத்தில் படப்பிடிப்பை தொடங்கினர். அங்கு முக்கியமான காட்சிகளை படமாக்கிய படக்குழு, தற்போது ஐதராபாத்தில் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பி உள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தை விஜயா புரடொக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
Share
Banner

Post A Comment: