Propellerads
Navigation

நயன்தாராவுக்கு கல்லெறியும் இயக்குனர்!


சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்களை இயக்கியவர் பொன்ராம். அந்த படங்களைத் தொடர்ந்து மீண்டும் அவர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்குகிறார். ஆனால் அதற்கு முன்னதாக, ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை இயக்குகிறாராம். கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் அந்த படத்தின் கதையை லாரன்சிடம் சொல்லி ஓகே செய்து விட்ட பொன்ராம், மொட்ட சிவா கெட்ட சிவா பட வேலைகள் முடிந்ததும் தனது படத்தை ஆரம்பிக்கிறாராம்.

மேலும், புதிய படத்தை மெகா பட்ஜெட்டில் இயக்க ஆசைப்படும் பொன்ராம், தனது முந்தைய படங்களில் ஸ்ரீதிவ்யா, கீர்த்தி சுரேஷ் என வளர்ந்து வரும் ஹீரோயின்களை நடிக்க வைத்தார். ஆனால் இந்த புதிய படத்தில் லாரன்சுக்கு ஜோடியாக நடிக்க சில முன்னணி நடிகைகளின் பெயரை பரிசீலனை செய்து வந்தவர், தற்போது நயன்தாராவை டிக் செய்துள்ளார். மேலும், தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா இந்த படத்தில் நடித்தால் தமிழுக்கு இணையாக தெலுங்கிலும் படத்தை பிரமாண்டமாக வெளியிடலாம் என்பதால் நயன்தாரா கால்சீட்டுக்கான பேச்சுவார்த்தையை முடுக்கி விட்டிருக்கிறார்கள்
Share
Banner

Post A Comment: