சமீபத்தில் கரீனா அளித்த பேட்டி ஒன்றில் தான் சாத்மா ரீ-மேக்கில் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது... சாத்மா ரீ-மேக்கில் நடிக்க சொல்லி என்னை பலரும் அணுகினார்கள், ஆனால் நான் முடியாது என்று கூறிவிட்டேன் என்றார்.
எதற்காக கரீனா மறுத்தார் என்பது பற்றி விசாரித்தபோது கிடைத்த தகவல் இது. அதாவது சாத்மா ரீ-மேக்கை மட்டுமல்லாது கரீனாவை வைத்து அதன் இரண்டாம் பாகத்தையும் படக்குழு இயக்க திட்டமிட்டதாகவும், இதுதொடர்பாக கரீனா பேசியபோது அவர் முடியாது என்று மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.


Post A Comment: