Propellerads
Navigation

கன்னட நடிகர் ரகு முகர்ஜியுடன் நடிகை அனு ரகசிய திருமணம்


பிரபல கன்னட நடிகர் ரகு முகர்ஜி, நடிகை அனு பிரபாகரை, நேற்று ரகசிய திருமணம் செய்து கொண்டார். இருவரின் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே, இதில் பங்கேற்றனர். கன்னட திரையுலகின் மூத்த நடிகை காயத்ரி பிரபாகரின் மகள் அனு பிரபாகர், 35. இவர், கன்னடத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்; தமிழில், மஜா, அற்புதம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அனு, மூத்த நடிகை ஜெயந்தியின் மகன் கிருஷ்ண குமாரை, ஏற்கனவே திருமணம் செய்தார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து செய்து கொண்டனர்.

அதேபோல், பிரபல கன்னட நடிகர் ரகு முகர்ஜி, 35, தன்னுடன் மாடலிங் செய்து வந்த பெண்ணை, ஏற்கனவே திருமணம் செய்தார். சில ஆண்டுகளில் அவரை பிரிந்து, பாரதி என்ற பெண்ணை திருமணம் செய்தார்; பின், அவரையும் விவாகரத்து செய்தார்.

இதனிடையே முதல் கணவர் கிருஷ்ண குமாரை விவாகரத்து செய்த பின், தாயார் காயத்ரி வீட்டில் வசித்து வந்த அனு, இரண்டு ஆண்டுகளாகவே, ரகு முகர்ஜியை காதலித்து வந்தார். இந்நிலையில், இருவரும் நேற்று ரகசிய திருமணம் செய்து கொண்டனர். இருவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும், இந்த திருமணத்தில் பங்கேற்றனர்.
Share
Banner

Post A Comment: