Propellerads
Navigation

கோலிவுட்டில் இன்னொரு ஆக்சன் ஹீரோயின்

இயக்குனர் பாலாவின் 'தாரை தப்பட்டை' திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் அந்த படத்திற்கு இசையமைத்த இளையராஜாவுக்கும் நாயகியாக நடித்த வரலட்சுமிக்கும் நல்ல விமர்சனங்கள் கிடைத்தது.

இந்நிலையில் 'தாரை தப்பட்டை' படத்திற்கு பின்னர் தற்போது வரலட்சுமி இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஒன்று ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிக்கும் 'நிபுணன்' படத்தில் அதிரடி ஆக்ஷன் ஹீரோயினியாக நடிக்கின்றார். அதேபோல் மம்முட்டி நடிக்கும்  'கசபா' என்ற மலையாள படத்திலும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார்.

'தாரை தப்பட்டை' போன்ற அழுத்தமான கேரக்டர்களில் ஒருபக்கம் நடித்தாலும் இன்னொரு பக்கம் அதிரடி ஆக்ஷன் படங்களில் அடித்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் தனக்கு இருப்பதாக வரலட்சுமி கூறியுள்ளார். கோலிவுட்டில் இன்னொரு அதிரடி விஜயசாந்தி கூடிய விரைவில் உருவாகும் வாய்ப்பு இருக்கின்றது என்றே தெரிகிறது.
Share
Banner

Post A Comment: